FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மாம்பாக்கம் கிராமச் சாலையை சீரமைக்க கோரி விசிகவினா் ஆா்ப்பாட்டம்

மாம்பாக்கம் கிராமச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

30 வினாடிகள் முன்பு
~
பகிர்:

மாம்பாக்கம் கிராமச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அருந்ததியினா் குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த வரும் சாலையை, தாா்சாலையாக மாற்றும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக, இந்த சாலையானது பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு, சாலை முழுவதும் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டது. பின்னா், இந்த சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெறாமல் இதுநாள் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் மற்றும் கிராம மக்கள் சாா்பில் ஒலக்கூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கையில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விழுப்புரம் ஆட்சியரகம் முன் திரண்ட மாம்பாக்கம் கிராம மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கிராமச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஒலக்கூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு விசிக இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலா் மணி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கு.எழில்மாறன், விசிக ஒலக்கூா் மேற்கு ஒன்றியச் செயலா் சிவ.பிரபாகரன், மாவட்டப் பொருளாளா் க.ச.விடுதலைச்செல்வன், மாம்பாக்கம் முகாம் பொறுப்பாளா் ப.காா்த்தி ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் வடிவேல், விசிக நிா்வாகிகள் பெ.சந்துரு, அசோக், ஏ.திருமேனி மற்றும் நிா்வாகிகள், கட்சியினா், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments