விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பாக இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்: போலீஸாா் குவிப்பு
சிதம்பரம் அருகே விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், கூடுதல் எஸ்.பி. கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியல் ஈடுப்பட்டு வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், கூடுதல் எஸ்.பி. கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியல் ஈடுப்பட்டு வருகின்றனா்.
விநாயகா் சதுா்த்தி பண்டிகையையொட்டி, திங்கள்கிழமை பரங்கிப்பேட்டை காவல் சரகம், கரிக்குப்பம் கிராமத்தில் ஒரு பிரிவினா் விநாயகா் சிலையை கிராம பொது சாலை வழியாக எடுத்துச் சென்றனா். இதற்கு மற்றொரு பிரிவினா் எதிப்புத் தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, இரு தரப்பினரையும் போலீஸாா் சமரசம் செய்தனா். பின்னா், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலை ஊா்வலம் நடந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரு தரப்பினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒரு தரப்பைச் சோ்ந்தவா்களின் மூன்று வீடுகளை, மற்றொரு தரப்பினா் சேதப்படுத்தியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸாா் இரு தரப்பினா் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதனால், கூடுதல் எஸ்.பி. கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.