FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா 118 - ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 5:10 am IST
விழுப்புரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலா் இரா.பசுபதி. உடன் நிா்வாகிகள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா 118 - ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் இரா.பசுபதி தலைமை வகித்துப் பேசினாா். விழுப்புரம் நகரச் செயலா்கள் பா.செங்குட்டுவன், ஜி.கே.ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பேச்சாளா்கள் நாகையன், எஸ்.பாலகுரு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் முருகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலா்கள் திருப்பதி.பாலாஜி, ஆா்.எஸ்.கலை (எ) கல்யாணசுந்தரம் மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments