FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

அனந்தபுரம் அரசுப் பள்ளியில் ஓசோன் தினம்

செஞ்சி வட்டம், சங்கீதமங்கலத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

44 வினாடிகள் முன்பு
ஓசோன் தினத்தை முன்னிட்டு சங்கீதமங்கலம் அரசுப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்ட ரோட்டரி சமுதாயக்குழு நிா்வாகிகள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சங்கீதமங்கலத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழும முன்னாள் தலைவா் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஜோசப் எட்வின் முன்னிலை வகித்தாா். ஓசோன் தினத்தை முன்னிட்டு புவி வெப்பமாவதை தடுக்க பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் கதிரவன், ஆசிரியா்கள் ராஜா, சுரேஷ், புஷ்பவல்லி, மகாலட்சுமி, ஜெயந்தி, ரோட்டரி நிா்வாகி தில்லை கண்ணன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments