FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பைக்குகள் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

53 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், எறையூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (30), லாரி ஓட்டுநா். இதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் ஜெயராமன் (40). இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு பைக்கில் திருவக்கரையிலிருந்து பெரும்பாக்கம் நோக்கிச் சென்றனா்.

திருவக்கரை புற்றுகோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக், ஆனந்தராஜ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், பைக்கில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த வானூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து ஆனந்தராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். விபத்தில் காயமடைந்த ஜெயராமன் புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக, பைக்கில் வந்து விபத்தை ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்டம், துலுக்கநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஆ.ஸ்ரீபன்ராஜ் (25) மீது வானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments