உடல்நலக்குறைவால் பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வலிப்பு வந்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வலிப்பு வந்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
வளவனூா் அருகிலுள்ள பரசுரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி அகிலாண்டேசுவரி (29). தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
அகிலாண்டேசுவரிக்கு நீண்ட நாள்களாக வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவா் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந் நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு அகிலாண்டேசுவரிக்கு திடீரென வலிப்பு வந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து அவரை குடும்பத்தினா் மீட்டு, மதகடிப்பட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அகிலாண்டேசுவரி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.