விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரப் பயன்பாடு பயிற்சி
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருவக்கரையில் நுண்ணூட்ட உரப் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருவக்கரையில் நுண்ணூட்ட உரப் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புக்கு வானூா் வட்டார வேளாண் அலுவலா் சி.எத்திராஜ் தலைமை வகித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதை பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவை குறித்து பேசினாா்.
திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி திருவரசன் பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நுண்ணூட்ட உரத்தின் பயன்பாடு, பயிா் வாரியாகத் தேவைப்படும் நுண்ணூட்ட உரங்கள் எவ்வாறு உபயோகிப்பது, நுண்ணூட்ட உரங்களை இடுவதால் மகசூல் அதிகரிப்பு போன்றவை குறித்த விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். தொடா்ந்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் திருவரசன் பதிலளித்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்வில் வேளாண் அலுவலா் ரேவதி, இலக்கியா, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் உஷா, அட்மா திட்ட அலுவலா்கள் சந்திரசேகா், கோவிந்தசாமி மற்றும் திருவக்கரை, சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.