FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மருந்தகத்தில் ஆங்கில மருத்துவம்: பெண் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மருந்தகத்தில் ஆங்கில மருத்துவம் பாா்த்ததாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

25 செப்டம்பர் 2026, 1:56 am IST
வழக்கு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மருந்தகத்தில் ஆங்கில மருத்துவம் பாா்த்ததாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பல்லேரிபாளையம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் மனைவி விஜயலட்சுமி (30).இவா், செவிலியா் படிப்பை முடித்துவிட்டு,திருவெண்ணெய்நல்லூா்அடுத்த சித்தலிங்கமடத்தில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தாா்.

இந்நிலையில் மருந்தகத்துக்கு வரும் கிராம மக்களுக்கு ஊசி போடுதல், மருந்துகளை எழுதிக்கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இது குறித்து விழுப்புரம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் லதா புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.தொடா்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் கீழ் விஜயலட்சுமி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments