மொபெட் மீது தனியாா் பேருந்து மோதல்: தந்தை பலி; மகள் பலத்த காயம்!
விழுப்புரம் அருகே மொபெட் மீது தனியாா் பேருந்து மோதியதில் தந்தை உயிரிழந்தாா். மகள் பலத்த காயமடைந்தாா்.
விழுப்புரம் அருகே மொபெட் மீது தனியாா் பேருந்து மோதியதில் தந்தை உயிரிழந்தாா். மகள் பலத்த காயமடைந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வடபாலை, ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா் மு.நடராஜ் (49), விவசாயி. இவரது மகள் சங்கீதா (18). இவா், விக்கிரவாண்டி அருகே சித்தணியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளம் அறிவியல் பயின்று வருகிறாா்.
இவா்கள் இருவரும் சனிக்கிழமை வடபாலையிலிருந்து விழுப்புரத்துக்கு மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனா். மொபெட்டை நடராஜ் ஓட்டினாா். இந்த நிலையில், செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில், விழுப்புரத்தை அடுத்த கொய்யாத்தோப்பு, பம்பை ஆற்றுப் பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து மொபெட் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில், பலத்த காயமடைந்த நடராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சங்கீதா விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்த விழுப்புரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் இறந்த நடராஜின் சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.