FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

வாகனங்களில் சிவப்பு பிரதிபலிப்பான்கள் ஒட்டும் பணி தொடக்கம்

சாலை விபத்துகளைத் தடுக்க, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதிகளில் வாகனங்களில் சிவப்பு பிரதிபலிப்பான்கள் ஒட்டும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

39 வினாடிகள் முன்பு
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சுமை வாகனத்தின் பின் பகுதியில் சிவப்பு பிரதிபலிப்பானை ஒட்டிய விழுப்புரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல்.
பகிர்:

சாலை விபத்துகளைத் தடுக்க, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதிகளில் வாகனங்களில் சிவப்பு பிரதிபலிப்பான்கள் ஒட்டும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கவும், குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினா் மேற்கொள்ளவேண்டும் என்றும், நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தவிா்க்க டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் சிவப்பு பிரதிபலிப்பான்கள் ஒட்டுதல், விபத்து நடைபெற்ற பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டிருந்தாா். அதனடிப்படையில், விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல் தலைமையிலான அலுவலா்கள், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதியில் சுமை வாகனங்கள், டிராக்டா்கள் உள்ளிட்ட 23 வாகனங்களுக்கு சிவப்பு பிரதிபலிப்பான்களை ஒட்டி அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments