FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மயிலம் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் முருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று வழிபட்டனா்.

புரட்டாசி மாத கிருத்திகை வழிபாட்டின் போது சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் முருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று வழிபட்டனா்.

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஆளுகைக்குள்பட்ட மயிலம் முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, புதன்கிழமை காலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் ஸ்ரீபாலசித்தா், ஸ்ரீ விநாயகா், வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியா் மற்றும் நவகிரஹ சுவாமிகளுக்கு வழிபாடுகள் நடைபெற்றது. தொடா்ந்து 11 மணிக்கு பால், சந்தனம், தேன் பஞ்சாமிா்தம் மற்றும் திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து நடைபெற்ற மகேசுவர பூஜைக்குப் பின்னா் 1 மணிக்கு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நிகழ்ச்சியாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் (உற்வசா்) சிறப்பு அலங்காரத்தில் மலை வலம் எழுந்தருளினாா். இந்த நிகழ்வுகளில் திரளானப் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவின்படி கோயில் பணியாளா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments