இளைஞனே விழித்தெழு!
வேறு எவரையும் விட, சுவாமி விவேகானந்தர் இளைஞர்களின் மீது, அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஒரு காலத்தில் இந்தியக் குடும்பங்கள், தலைமுறை சார்ந்த உறவுகளின் தளத்தின் மீது கட்டப்பட்டிருந்தன. தாத்தா, பாட்டி, உறவினர்கள் போன்றோரின் பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தனர்.
Advertisement
Advertisement
முதியவர்கள் குடும்பத்தின் மையமாக இருந்தனர். குடும்பம் என்பது வெறும் பொருளாதார அமைப்பாக அல்லாமல், அதீத உணர்வுகளை மேலாண்மை செய்யும் அமைப்பாக இருந்தது.
இன்று, சமூக ஊடகங்கள் உருவாக்கும் செயற்கை அடையாள உலகம், உண்மையான மனித உறவுகளை மெதுவாக மாற்றிவருகிறது. உறவுகள் சிக்கலாகி வருகின்றன. சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு நல்வழியை மட்டும் காட்டும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
எதிர்கால இந்தியாவின் தலைவர் இவர்களே. இவர்களை விவேகானந்தர் வழியில் நன்கு வழிகாட்டி அவர்களை ஆக்கச் சக்திகளாக மாற்றும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.