FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கிய ஷைன் திருச்சி அமைப்பு!

திருச்சியில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஷைன் திருச்சி அமைப்பு தொடங்கியுள்ளது பற்றி...

Updated On : 18 ஜூலை 2026, 4:03 pm IST
ஷைன் திருச்சி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம்.... - DIN
பகிர்:

ஆடி மாதம் துவங்கி விட்டதால், ஷைன் திருச்சி அமைப்பு சார்பாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பல வகை மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அண்ணா விளையாட்டு அரங்கில் மல்லர் கம்பம் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியை ஷைன் திருச்சி அமைப்பு மேற்கொண்டுள்ளது.

மரக் கன்றுகளை நடுவதற்கு முன்னதாக, எல்நினோ பாதிப்பு குறித்தும் மரக் கன்றுகள் நடுவதன் அவசியம் பற்றியும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து திருச்சி முழுவதும் முக்கியமான இடங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

எல்நினோ பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மரக்கன்றுகளை நடும் முக்கியத்துவத்தை அங்கு வருபவர்களுக்கு மல்லர் கம்ப வீரர்கள் எடுத்துக் கூறினர்.

summary

The Shine Trichy organization has launched a tree-planting initiative in Trichy

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments