அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 5
எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
மனதில் தெளிவான எண்ணம் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த வாரம் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் வரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும்.
Advertisement
Advertisement
நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். கலைத்துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமை அன்று நவகிரகத்தில் புதனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.