அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 8
எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உழைப்பின் முக்கியத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் எட்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில் முன்னேற்றம் காணப்படும்.
கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.
Advertisement
Advertisement
உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம். பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் அகலும். மாணவர்களுக்கு: எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வி யில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.