முகப்பு
வணிகம்

ரூ.7,000 சலுகையுடன் அறிமுகமாகிறது ‘ரியல்மீ நியோ 3டி’ ஸ்மார்ட்போன்

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
பகிர்:

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ரியல்மீ நிறுவனம் சமீப காலமாக இந்தியாவில் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு  வருகிறது. அந்த வகையில் புதிதாக  ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் நாளை(வெள்ளிக்கிழமை) அறிமுகம் செய்கிறது. 

‘ஜிடி நியோ 3டி’ சிறப்பம்சங்கள் :

*  6.62 இன்ச் அளவுகொண்ட  அமோல்ட் எச்டி திரை 

*  ஸ்னாப்டிராகன் 880 எஸ்ஓசி பிராசசர்

*  8 ஜிபி ரேம், 128  ஜிபி மெமரி

* பின்பக்கம் 64 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமரா 16 எம்பி பொருத்தப்பட்டுள்ளது.

*  5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*  ஆண்டிராய்ட் 12 - ரியல்மி இயங்குதளம்

இந்தியாவில் இதன் விற்பனை விலை ரூ.37,500 ஆக இருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். நிறுவனத் தரப்பிலிருந்து ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் அன்று வாங்குபவர்களுக்கு ரூ.7,000 சலுகை விலையாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →