காலா படத்தை பேஸ்புக்கில் லைவ் செய்த தம்பிக்கு நன்றி - பா.இரஞ்சித்
காலா படம் வெளியானதை அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வெளியானதை அடுத்து சென்னை சத்யம் திரையரங்குக்கு வந்திருந்த இயக்குநர் இரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,
"காலாவில் ரஜினியிசம் நன்றாக வந்திருக்கிறது. நான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்தேன். அதே போல் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
நிலம் பொதுவானது. நிலமற்றவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்ப நினைக்கிறேன். சமூகத்தில் சூழல் எப்படி இருக்கிறது, இந்த படத்தின் மூலம் ஒரு விவாதத்தை தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
Advertisement
Advertisement
தற்போது வரை தமிழகத்தில் 2 காட்சிகள் வெளியாகியுள்ளன. கபாலிக்கு இரண்டு தரப்பான விமரிசனமும் எழுந்தது. ஆனால், காலாவுக்கு இதுவரை நேர்மறையான விமரிசனமே வந்துள்ளது.
ரஜினியின் அரசியலுக்காக எடுக்கப்படவில்லை. மக்களின் பிரச்சனை குறித்து எடுக்கப்பட்ட படம். மக்களின் பிரச்சனையை பேசுவது தான் அரசியல் நோக்கம்.
கர்நாடகாவில் வெளியாகாதது கவலை அளிக்கிறது. இன்றே அங்கும் வெளியாவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கதைக்கு சம்பந்தப்பட்ட வசனங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாருக்காகவும் எதுவும் திரிக்கப்படவில்லை. மக்களிடம் இந்த படத்துக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.
மிகப் பெரிய இலக்கே மக்களின் பிரச்சனையை பேசுவது தான். சமுதாயத்தில் ஒரு பாகுபாடு உள்ளது. அந்த பாகுபாட்டை உடைப்பதற்கு கலையை பயன்படுத்துவேன்.
என்னை சுற்றி நிகழ்வது அரசியல். அதனால், நான் பேசுவது அரசியல் குறித்து தான் இருக்கும். காலா 2-ஆம் பாகம் என்று எதுவும் இல்லை. நான் எடுக்கும் அனைத்துமே அட்டக்கத்தியின் நீட்சியே. அதன் அடுத்தடுத்த பாகங்கள் தான் எனது திரைப்படங்கள்.
பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த தம்பிக்கு நன்றி" என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.