முத்துகுமரன் மீது போலீசில் புகார் அளிக்காதது ஏன்? புதிய ஆடியோ வெளியிட்ட வஹிதா!
முத்துகுமரன் மீது போலீசில் புகார் கொடுக்காதது ஏன்? என தற்கொலைக்கு முயன்ற வஹிதா விளக்கம் அளித்துள்ளதைப் பற்றி...
முத்துகுமரன் மீது போலீசில் புகார் கொடுக்காதது ஏன்? என தற்கொலைக்கு முயன்ற வஹிதா விளக்கம் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பர்தா அணிந்து நடன விடியோ வெளியிட்டு பிரபலமான வஹிதா பேகம். இவர் தொடக்க காலத்தில் மதரீதியிலான விமர்சனத்துக்கு உள்ளாகி இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்றார்.
பிக் பாஸின் 8 ஆவது சீசனின் வெற்றியாளர் முத்துக்குமரன் தனக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றிவிட்டதாக கூறி இன்ஸ்டா பிரபலம் வஹிதா அக்தர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
இதனைத்தொடர்ந்து முத்துகுமரனை ஏராளமானோர் விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் 'இந்தப் பிரச்னையை இதோடு விட்டுவிடலாமே...' என்று அந்த முத்துகுமரன் புலம்பும் இன்னொரு ஆடியோவும் வெளியானது.
இந்தச் சூழலில் சம்பந்தப்பட்ட அந்த இளம் பெண் புதிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், முத்துகுமரன் மீது போலீஸில் புகார் அளிக்காதது ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த ஆடியோவில், “சாகப்போகிறேன் என்ற எண்ணத்தில் என்னிடம் இருந்த ஆதாரங்களை எல்லாவற்றையும் நீக்கிவிட்டேன். இந்த ஆடியோ முத்துகுமரனுக்கோ, ரசிகர்களுக்கோ கிடையாது.
இந்த ஆடியோ முத்துகுமரனுடைய அம்மாவுக்கு. நான் உங்கள் மகனுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த விடியோவை வெளியிடவில்லை. இந்த வாழ்க்கையைத் திரும்பி வாழமாட்டேன் என்ற நம்பிக்கையில்தான் அந்த விடியோவை வெளியிட்டேன்.
ஆனால், இங்கு வந்து நிற்பேன் என்று எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் கெஞ்சினார். இந்தத் தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூற என்னிடம் கேட்டார். ஆனால், அதை என்னால் மாற்ற முடியாது.
ஏன்னென்றால், அந்த விடியோக்கள் எல்லாம் வைரலாகிவிட்டன. இதற்குப் பின் அவருக்கும் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை. விவகாரத்தில் எனக்கு மீடியா மீதும் போலீஸ் மீதும் நம்பிக்கை இல்லை.
நீங்களும் ஒரு பெண் தானே; நீங்களும் ஒரு மகனை பெற்று வளர்த்திருக்கிறீர்கள். எந்தவொரு பெண்ணும் தன்னை அசிங்கப்படுத்திக் கொண்டு இவ்வளவு விஷயங்களை வெளியே சொல்ல மாட்டாள். நான் சொன்னது எதும் பொய் கிடையாது. நாளை அதன்பின்னர் என்னுடைய புகாருக்காக விசாரிக்க வந்தார்கள் என்றால், நான் அங்கு பொய் சொல்லமாட்டேன்.
அங்கு நியாயம் வெற்றிபெற்றால் உங்கள் மகன் நிச்சயமாக ஜெயிலுக்குத்தான் செல்வான். உங்கக்கிட்ட பணபலம் இருந்து நீங்கள் என்ன ஏதாவது செய்து சிறைக்குள்ளே தள்ள வேண்டுமெ என்று நினைத்தீர்கள் என்றால் என்னுடைய பாவம் உங்களை சும்மா விடாது. உங்கள் மகனை கல்யாணம் செய்ய வேண்டுமென்பது என்னுடைய விருப்பம் கிடையாது, எனக்கு பணமும் தேவை கிடையாது. அவருக்கு கிட்ட கேட்டது மன்னிப்புதான். ஆனால், அவர் என்கிட்ட அதை கேட்கவில்லை.
அதை நான் வற்புறுத்தி பெற்றாலும் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொல்லி விட்டுவிட்டேன். அவரும் நானும் பிடித்துத்தான் ஒன்றாக இருந்தோம். பொய்யான வாக்குறுதியைக் கொடுத்தது அவர் தான்” என்றும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
The young woman who attempted suicide has explained why she did not file a police complaint against Muthukumaran.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.