FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வைரலாகும் ஆர்ஜே வைஷ்ணவியின் ஸ்விம்சூட் புகைப்படங்கள்! வைரல் ஆகிறதா? ஆக்கப்படுகிறதா?

வீட்டின் வரவேற்பறைக்கு வந்து தரிசனம் தரும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை பிக்பாஸ் குழுவினர் ஏன் அமுல்படுத்தக் கூடாது?

Updated On : 19 ஜூன் 2018, 3:07 pm IST
பகிர்:

பிக்பாஸ் சீஸன் 2 ஒளிபரப்பாகத் தொடங்கி 2 நாட்கள் கடந்திருக்கின்றன. அதற்குள், சீஸன் 1 க்கு இருந்த எதிர்பார்ப்பும் வரவேற்பும் சீஸன் 2 க்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சில செய்திகள் மக்களை மூளைச்சலவை செய்யும் வேலையில் கட்டவிழ்க்கப் பட்டிருக்கின்றன. இதோ பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்ஜே ரம்யா, பிக்பாஸ் வீட்டில் தனது சக போட்டியாளர்களுடன் நீச்சல் குளத்தில் குளிக்கையில் ஸ்விம்சூட் அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் இன்று வைரலாகத் தொடங்கி விட்டன என இணைய ஊடகமொன்றில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். வாசிக்கையில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நீச்சல் குளத்தில் ஒரு பெண் ஸ்விம் சூட் அணிந்து குளிப்பதெல்லாம் இன்று சாதாரண விஷயம். ஸ்விம்சூட் அணிந்து கொண்டு அவர் காய்கறி வாங்க மார்கெட்டுக்குச் சென்றால் தானே அது பரபரப்புச் செய்தியாக இருக்கக் கூடும். அவர் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் நீச்சல்குளத்தில் குளித்தார் என்பதில் என்ன வைரல் இருக்கிறதோ? என்று சிலர் கருதலாம். ஆனால் இதைக் குறித்து நிகழ்ச்சியின் ஆங்கரான கமல் ஹாசனுக்கு புகார் அளித்திருக்கும் ஹரிபிரபாகர் எனும் பிக் பாஸ் ரசிகர் அப்படிக் கருதவில்லை. அவர் என்ன சொல்கிறார் எனில்,

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்யாசமின்றி பல லட்சக்கணக்கான மக்கள் சின்னத்திரை ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கத் துவங்குவார்கள் எனச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அப்படியான நிலையில் வீட்டின் வரவேற்பறைக்கு வந்து தரிசனம் தரும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை பிக்பாஸ் குழுவினர் ஏன் அமுல்படுத்தக் கூடாது? இப்படி ஸ்விம்சூட் காட்சிகளை எல்லாம் நடுக்கூடத்தில் உட்கார்ந்து கொண்டு குழந்தைகளுடன் காணும் போது லஜ்ஜையாக இருக்காதா? என்று கேட்கிறார்.

அவரது கேள்வியில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? நீங்களே சொல்லுங்கள்.

Advertisement

Advertisement

குடும்பத்துடன் ரிசார்ட்டுகளில் தங்கும் போதோ அல்லது தங்களது தனிப்பட்ட நேரங்களிலோ நீச்சல் குளத்தில் குளிக்க இறங்கும் பெண்கள் ஸ்விம்சூட் அணிந்து கொள்வது சாதாரண செயல். அதே அவரவர் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு பலகோடிப் பேர் பார்க்கக் கூடிய ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் போது போட்டியாளர்களை ஸ்விம்சூட் அணிந்து கொண்டு குளிக்க அனுமதிப்பது பார்வையாளர்களிடையே கண்டன உணர்வைத் தூண்டும் முயற்சியாகவும் இருக்கலாம், அல்லது மக்களிடையே இந்நிகழ்ச்சியைப் பற்றிய பரபரப்பான பேச்சுக்களைத் தூண்டி விட்டு நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தும் முயற்சியாகவும் இருக்கலாம். 

மேற்படி புகைப்படங்கள் பிக்பாஸில் இன்னும் ஒளிபரப்பாகவில்லை என்பது கூடுதல் தகவல். புகைப்படங்கள் மட்டுமே கசிய விடப்பட்டிருக்கின்றன. ஒருவேளை பிக்பாஸ் சீஸன் 2 க்கு ஆரவாரமான வரவேற்பு இல்லையோ? எனக்கருதி பிக்பாஸ் படக்குழுவினரே இப்படியொரு பப்ளிசிட்டி வேலையில் இறங்கி விட்டார்களா என்றும் பலவிதமான யூகங்கள் பிக்பாஸ் ரசிகர்களிடையே உலவுகின்றன.

அதுசரி ஆடை விஷயத்தில் தமிழர்களான நாம் ஏன் இத்தனை ரியாக்ட் ஆகிறோம் என்று யோசித்தால், அதற்காகத்தான் இப்படியொரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்களோ என்பது புலனாகக் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments