விஜய் சேதுபதியின் புதிய பட 'பர்ஸ்ட் லுக்' வெளியீடு
'வாலு' பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: 'வாலு' பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' வெளியிடப்பட்டுள்ளது.
சிம்பு நடித்த ‘வாலு’ மற்றும் விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தினை இயக்கி வருகிறார்.
விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு 'சங்கத்தமிழன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். அத்துடன் காமெடி வேடத்தில் சூரி நடிக்க, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.