உதவி ஆட்சியராக பயிற்சி பெறும் நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் - குவியும் பாராட்டு
நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்று தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார்.
நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் குடிமை பணி தேர்வில் வெற்றிபெற்று தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார்.
90களில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் கலக்கியவர் சின்னி ஜெயந்த். ரஜினிகாந்த், விஜய், அஜித், பிரஷாந்த் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க| நான் வாழ விரும்பவில்லை: விபத்து குறித்து நடிகை யாஷிகா உருக்கம்
Advertisement
Advertisement
மேலும் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி தேர்வில் கலந்துகொண்டு, 75 வது ரேங்க் பெற்று வெற்றிபெற்றார்.
இதையும் படிக்க | சன்னி லியோனுடன் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்
தற்போது அவர் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 3 மாதங்களாக அவர் அங்கு பணிபுரிந்து வருகிறார். ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு சார் ஆட்சியராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தற்போது மிக ஆர்வமாக தனது பணியை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.