முகப்பு
செய்திகள்

பிசாசு 2 திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் நடிகர் அஜ்மல்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அஜ்மல் நடித்துள்ளார்.

Updated On : 19 ஆகஸ்ட் 2021, 6:42 pm IST
நடிகர் அஜ்மல்
பகிர்:

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அஜ்மல் நடித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் திரைப்படம் பிசாசு 2.கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். பிசாசு முதல் பாகம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் பிசாசு 2 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கினின் அஞ்சாதே திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அஜ்மல் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவற்றுக்கு மத்தியில் பிசாசு 2 திரைப்படத்தில் நடிகர் அஜ்மல் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரின் திரைப்படத்திலேயே சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் அஜ்மல் ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments