பிரம்மாண்டமாக தயாராகும் இயக்குநர் ஷங்கர் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா ?
இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.
இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.
இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்பொழுது துவங்கும் என எந்த தகவல்களும் இல்லை. இதற்கிடையில் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதையும் படிக்க| குழந்தைப் பருவ புகைப்படத்தை பகிர்ந்த பிரபல கதாநாயகி: யாரென்று தெரிகிறதா?
Advertisement
Advertisement
இந்த நிலையில் இயக்குநர் ஷங்கரும், நடிகர் சிரஞ்சீவியின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம் சரணை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் மும்முரத்தில் இருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் தமன் இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று (சனிக்கிழமை) தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி கதாநாயகி கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் இயக்குநர் ஷங்கருடன் கியாரா அத்வானி உரையாடிக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கியாரா அத்வானி, எம்,எஸ்.தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர். மேலும் ராம் சரணுடன் இணைந்து ஏற்கனவே 'வினய விதேய ராமா' என்ற படத்தில் நடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.