‘லவ் டுடே’ இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய்?
லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடிகர் விஜய்யுடன் இணைந்து புதிய படத்தினை இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார்.
கடந்த நவ.4 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதனால், திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் இதுவரை இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விஜய்யின் 66வது படமான வாரிசு பொங்களுக்கு வெளியாக உள்ளது. ‘தளபதி 67’ படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதால் ‘தளபதி 68’ அல்லது ‘தளபதி 69’ படத்தினை பிரதீப் ரங்கநாதன் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தினை ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிகில், லவ் டுடே திரைப்படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.