செய்திகள்

சுஷாந்த் சிங் கொலை? மருத்துவமனை ஊழியர் அதிர்ச்சி தகவல்!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவரது எம்.எஸ்.தோனி திரைப்படம் இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற திரைப்படமாகும். இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். 

தற்போது, “ சுஷாந்த் சிங் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அவரது உடலை பார்த்ததும் எனக்கு தோன்றியது. நான் எனது மேலதிகாரிக்கு இது குறித்து கூறினேன். இரவில்தான் அவர்கள் உடற்கூராய்வை செய்தனர். அவர்கள் மொபைலில் புகைப்படம் மட்டுமே எடுத்துக் கொண்டனர். விடியோ எடுக்கவில்லை. சரியான முறையில் அவர்கள் இதை செய்யவில்லை” என பிணவறை தொழிலாளர் ரூப்குமார் ஷா என்பவர் சர்சைக்குள்ளான கருத்து தெரிவித்துள்ளார். சுஷாந்தின் உடற்கூராய்வின் போது அவரும் அங்கிருந்ததாக கூறியுள்ளார். 

சமூக வலைதளம் முழுக்க இந்த செய்தி தீயாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்புக்கு சமர்ப்பிக்கிறேன்! - மரியா மச்சாடோ

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

SCROLL FOR NEXT