‘லைஃப் ஆஃப் பழம்’: திருச்சிற்றம்பலம் திரைப்பட 3ஆவது பாடல் வெளியீடு
அனிருத் இசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ’லைஃப் ஆஃப் பழம்’ பாடல் புதன்கிழமை வெளியானது.
அனிருத் இசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ’லைஃப் ஆஃப் பழம்’ பாடல் புதன்கிழமை வெளியானது.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தல் நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ளனர்.
இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே தாய் கிழவி, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது லைஃப் ஆஃப் பழம் என்ற பாடல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் - நடிகையிடம் பேரம் பேசிய தொழிலதிபர் - அதிர்ச்சி சம்பவம்
திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிததுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.