முகப்பு
செய்திகள்

பொன்னியின் செல்வனுக்காக மணிரத்னம் அளித்த வாய்ப்பை நிராகரித்த அமலா பால் - வெளியான காரணம்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததற்கான காரணத்தை நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். 

Updated On : 13 செப்டம்பர் 2022, 4:34 pm IST
பகிர்:

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததற்கான காரணத்தை நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். 

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள், டிரெய்லர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கந்த மாறனாக விக்ரம் பிரபு, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், ரவிதாஸாக ஆடுகளம் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். 

Advertisement

Advertisement

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் அமலா பால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது, '' பொன்னியின் செல்வன் படத்தின் நடிகர்கள் தேர்வில் கலந்துகொண்டேன். நான் மணிரத்னத்தின் பெரிய ரசிகை. ஆனால் அப்போது படம் துவங்கவில்லை. இதனால் நான் ஏமாற்றமடைந்தேன். 

கடந்த 2021 ஆம் ஆண்டு மணிரத்னம் மீண்டும் என்னை பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக அழைத்தார். நான் மனநிலை சரியில்லாமல் இருந்தேன். அதனால் அந்த வாய்ப்பை மறுத்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த வேடத்துக்காக தன்னை மணிரத்னம் தேர்ந்தெடுத்தார் என்பதை அமலா பால் தெரிவிக்கவில்லை. '

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.