''இளையராஜாவை காயப்படுத்தாதீங்க'': விஜயகாந்த் வேண்டுகோள்
இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கரும் மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையையொட்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிக்க | பாலிவுட்டில் சாதனை படைத்த கேஜிஎஃப் 2 பட வசூல்
Advertisement
Advertisement
இந்த நிலையில் நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் அவரவர் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.
ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோலத்தான் இங்கு யாரையும் ஒப்பிட்டு பேச முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக்கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது''. என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.