FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்

வியத்நாம் படகு விபத்தில் உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்பிக்கொண்டிருப்பதாக இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜூலை 2026, 2:56 pm IST
வியத்நாம் படகு விபத்து.
பகிர்:

வியத்நாம் படகு விபத்தில் உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்பிக்கொண்டிருப்பதாக இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் உயிர்பிழைத்த 15 பேர் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இரண்டு பேரில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். மற்றொருவர் பு குவோக்கில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தேவையான உதவிகளை வழங்குவதற்காக தூதரக மற்றும் துணைத் தூதரக குழுக்கள் பு குவோக்கில் முகாமிட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வியத்நாமின் ஹான் மே ரட்டிலிருந்து 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 ஊழியா்களுடன் ஆன் தோய் துறைமுகம் நோக்கி கடலில் சனிக்கிழமை சென்ற விசைப் படகு, ஹான் மே ரட்டிலிருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவில் கடல் சீற்றம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தத் தகவல் அறிந்ததும், கரையிலிருந்து பிற சுற்றுலாப் படகுகள், கடலோரக் காவல் படை, கடற்படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், விபத்துக்குள்ளான படகின் 4 ஊழியா்கள் உள்பட 21 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். அவர்களில் 10 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.

மீட்கப்பட்டவா்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் லாவா கைப்பேசி நிறுவனத்தின் கைப்பேசிகளை அதிக அளவில் விற்பனை செய்த முகவா்கள், ஊழியா்கள் என 105 போ் அந்த நிறுவனம் சாா்பில் வியத்நாம் நாட்டுக்கு கடந்த 8-ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

அவா்களில் 32 போ் கொண்ட குழுவினா் கடலில் படகில் சென்றபோதுதான் விபத்தில் சிக்கிக் கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Sixteen Indian tourists who survived a boat accident off Vietnam's Phu Quoc Island that claimed 15 lives have been discharged from hospital and are on their way back home, the Indian mission said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments