’அவருக்கு இது பிடிக்காது..’ நடிகர் அஜித் குறித்து இயக்குநர் எச்.வினோத் கருத்து
நடிகர் அஜித் குறித்து இயக்குநர் எச்.வினோத் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித் குறித்து இயக்குநர் எச்.வினோத் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ளனர்.
வலிமை படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு படத்திற்காக இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.
Advertisement
Advertisement
திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்க: திருமண புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஹன்சிகா!
மேலும், டிசம்பர் 9ஆம் தேதி அஜித்குமாரின் அறிமுக பாடலான ‘ஜில்லா..ஜில்லா’ வெளியாகிறது. இதனை போனி கபூர் தனது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் எச்.வினோத் நேர்காணல் ஒன்றில், ‘ஒருவர் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக ஒட்டுமொத்தத் தொழிலையே பொதுமைப்படுத்தாதீர்கள். அஜித் சாருக்கு கூட இப்படி தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கிப் பேசுவது பிடிக்காது. அவரைப் பொறுத்தவரை படத்தின் வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. படக்குழுவினர் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க வேண்டும். மதிக்கப்பட வேண்டும். வெற்றி வரும் போகும் அதற்காக மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்பார்’ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.