’விஜய் 67’ இப்படித்தான் இருக்கும்: லோகேஷ் கனகராஜ்
விஜய் 67 திரைப்படத்தின் மேக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் 67 திரைப்படத்தின் மேக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் டிச.5 ஆம் தேதி நடைபெற்றது.
Advertisement
Advertisement
மேலும், விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரம் துவங்க உள்ளது.
இதையும் படிக்க- இயக்குநராகும் ராதிகா ஆப்தே!
இந்நிலையில், இப்படம் முழுக்க முழுக்க தன்னுடைய படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படம் பாதி இயக்குநர் படமாகவும் பாதி விஜய் படமாகவும் உருவானது.
முன்னதாக, இப்படத்தில் நடிகர் விஜய் 50 வயது கதாபாத்திர தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் எதிர்பாராத சமயத்தில் குடும்ப தலைவன் எப்படி ஒரு கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.