முகப்பு
செய்திகள்

வலிமை புதிய க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு

வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், புதிய க்ளிம்ப்ஸ் விடியோவை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டது.

Updated On : 14 பிப்ரவரி 2022, 10:08 pm IST
பகிர்:


வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், புதிய க்ளிம்ப்ஸ் விடியோவை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டது.

அஜித் குமார், ஹூமா குரேஷி நடிப்பில் ஹெச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை. கரோனா காரணமாக மிகவும் தாமதமாக கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்கபீஸ்ட் பட அரபிக் குத்து பாடல் வெளியானது

Advertisement

Advertisement

ஆனால், மீண்டும் ஒமைக்ரான் வகை கரோனா காரணமாக பொங்கல் வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 24-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் விடியோவை படத் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments