'வலிமை' எந்த ஓடிடியில், எப்பொழுது வெளியாகிறது தெரியுமா?
நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வலிமை. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், ரசிகர்களின் ஆதரவால் நல்ல வசூலைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படம் வருகிற மார்ச் 24 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது படம் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | விஜயகாந்த்தா இவர்? வெளியான சமீபத்திய புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளதாக கூறப்பட்டது. படத்தில் இசை யுவன் ஷங்கர் ராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஜிப்ரானுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இசையமைப்பாளர் யுவன், தனது ட்விட்டர் பக்கத்தில் பின்னணி இசை ஜிப்ரான் என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்தப் படத்தில் பைக் ரேஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், இரண்டாம் பாதி சற்று தொய்வை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.