அஜித்தின் வலிமையுடன் மோதவிருக்கிறாரா விஷால் ?
பொங்கலுக்கு விஷாலின் வீரமே வாகை சூடும் படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்து நடித்து வரும் படம் வீரமே வாகை சூடும். இந்தப் படத்தை து.பா.சரவணன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். இதனால் பொங்கலுக்கு வலிமையுடன் வெளியாகவிருந்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும் பிரபாஸின் ராதே ஷ்யாம் படமும் தள்ளிப்போக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | எதிர்பாராததை எதிர்பாருங்கள்: பிக் பாஸ் வீட்டிற்குள் சரத் குமார்!
Advertisement
Advertisement
இதனையடுத்து பொங்கலுக்கு வலிமை படம் மட்டும் தனியாக வெளியாக அதிக வாய்ப்பிருப்பதால், விஷால் தனது வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம். வலிமை திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படம் 14 ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.