இரவின் நிழல் படத்தில் பார்வதியாக களமிறங்கும் சாய் பிரியங்கா
பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படத்தில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் சாய் பிரியங்கா நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படத்தில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் சாய் பிரியங்கா நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படம் உலகின் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாகும்.
உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம்
Advertisement
Advertisement
அதாவது கேமரா ஆன் செய்து மறு முறை ஆஃப் செய்யும் வரை படமாக்கப்படுவது ஒரு ஷாட். பொதுவாக படங்களில் ஒரு காட்சிக்கு ஏகப்பட்ட ஷாட்கள் படமாக்கப்படும். ஆனால் இரவின் நிழல் படம் ஒட்டுமொத்தமாக நூறு நிமிடங்கள் கட்டே இல்லாமல் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | போலி உயில் மூலம் நடிகர் பிரபு, ராம்குமார் எங்களை ஏமாத்திட்டாங்க - சிவாஜியின் மகள்கள் பரபரப்பு புகார்
இப்படி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இந்தப் படம் காட்சிகள் ஒரே நேர்கோட்டில் இல்லாமல், முன், பின் என வருமாறு படமாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இந்தப் படம் உலகின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் பிரியங்கா ரூத்
இந்த நிலையில் இந்தப் படத்தின் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் போஸ்டர் மூலம் பார்த்திபன் அறிமுகப்படுத்திவருகிறார். ஏற்கனவே பிரிகிடா, வரலட்சுமி, ரோபோ ஷங்கர் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது சாய் பிரியங்கா ரூத் இந்தப் படத்தில் பார்வதி என்ற வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவின் நிழல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.