11 நாளில் ரூ.250 கோடி வசூலான ‘வாரிசு’ திரைப்படம்!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்து விட்டது. தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் வாரசுடு வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் ஜன.14இல் வெளியாகியது.
இதையும் படிக்க: ‘ஒரு பொண்ணுக்காக இல்லைனா எதுக்காக உயிர் வாழனும்?’ - வெளியானது மைக்கேல் டிரைலர்!
Advertisement
Advertisement
ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை. தமனின் பாடலுக்கு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை நடனம் ஆடுவதை இணையத்தில் பார்க்க முடிந்தது.
நேற்று வாரிசு படக்குழு வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், 11 நாளில் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.