800: டிரைலரை வெளியிடும் சச்சின்!
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள ‘800’ படத்தின் டிரைலரை சச்சின் டெண்டுல்கர் வெளியிட உள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்ததால் அவரின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஈழப்போர் பிரச்னையில் தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. இதனால், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார்.
இதையும் படிக்க: சிம்பு 48: புதிய தோற்றத்தில் சிம்பு!
Advertisement
Advertisement
800 படத்தின் நாயகனாக ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதூர் மிட்டல் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இப்படத்தில் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசிய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?: ரசிகர்கள் கொந்தளிப்பு!
இப்படத்தை இயக்குகிறார் எம்.எஸ். ஸ்ரீபதி. தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியாக உள்ளன. இந்நிலையில் படத்தின் டிரைலரை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் செப்.5ஆம் நாள் மும்பையில் மதியம் 2.45 மணிக்கு வெளியிட உள்ளார்.
இதையும் படிக்க: நா ரெடி பாடலுக்கு உற்சாக நடனமாடிய நடிகை அதிதி ஷங்கர்! (விடியோ)
தற்போது போஸ்ட் புரடக்ஷன் நடந்துவரும் இப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. ஜிப்ரன் இசையமைக்க பிரவின் கே.எல். எடிட்டிங் செய்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.