ஐமேக்ஸ் தரத்தில் லியோ!
ஐமேக்ஸ் தொழில்நுட்ப தரத்தில் லியோ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது.
Advertisement
Advertisement
மேலும், லியோவிற்காக மீண்டும் சில காட்சிகளை எடுக்க படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்றும் லியோ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்.
இந்நிலையில், இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்ப தரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.