ரூ.500 கோடியை கடந்த ஜெயிலர் வசூல்!
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ரூ. 500 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ரூ. 500 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
இதையும் படிக்க | விஜய் 68: யுவனுடன் களமிறங்கும் தமன்!
Advertisement
Advertisement
இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது வார இறுதி நாள்களை கடந்துள்ள ஜெயிலர் 11-வது நாள்களில் ரூ. 500 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலை கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.