ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியும் பார்க்க வேண்டிய படம் அநீதி... : இயக்குநர் ஷங்கர் புகழாரம்!
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அநீதி திரைப்படத்தினை புகழ்ந்து பேசியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
வசந்தபாலன் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், அநீதி படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகி - துஷாரா விஜயன். வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு: எட்வின் சகாய்.
இதையும் படிக்க: நடிகர் ரவி தேஜாவுடன் 4வது முறையாக இணைந்த பிரபல இயக்குநர்!
இசை - ஜி.வி. பிரகாஷ். பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளார்கள். மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாரின் நட்பின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் அப்பாடலைப் பாடியுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜவான் முன்னோட்ட விடியோ எப்போது?: படக்குழு அறிவிப்பு!
அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படம் வருகிற ஜூலை 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் கூறியதாவது:
இயக்குநர் வசந்தபாலன் அருமையாக எடுத்துள்ளார். படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் நம்மை அழ வைக்கிறார். தனித்துவமாக நடித்துள்ளார். நடிகை துஷாரா விஜயனும் சிறப்பாக நடித்துள்ளார். காளி வெங்கட், வனிதா விஜயகுமார் உள்பட பலரும் நன்றாக நடித்துள்ளனர். ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியும் பார்க்க வேண்டும். நமக்கு கீழ் வேலை செய்யும் மனிதர்களை எப்படி நடத்த வேண்டுமென கற்றுக்கொடுக்கும் சிறந்தபடமாக அநீதி இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.