நீண்ட நாள்களுக்குப் பின்.. மகிழ்ச்சியைப் பகிர்ந்த யுவன்!
நடிகர் விஜய்யின் 68ஆவது படம் குறித்து யுவன் சங்கர் ராஜா தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் 68ஆவது படம் குறித்து யுவன் சங்கர் ராஜா தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்குப் பிறகு, விஜய்யை இயக்குவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த அறிவிப்பை விஜய் ரசிர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தன் டிவிட்டர் பக்கத்தில், ‘நீண்ட நாள்களுக்குப் பின் விஜய் உடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. உற்சாகத்தில் இருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தின் மூலம் விஜய்யுடன் வெங்கட்பிரபு முதன்முறையாகவும், அதேசமயம் யுவன்சங்கர்ராஜா இரண்டாவது முறையாகவும் கூட்டணி அமைத்துள்ளனர். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசைமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.