FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிக் பாஸில் இருந்து வெளியேறினார் பவா செல்லத்துரை!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பவா செல்லத்துரை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 பிப்ரவரி 2024, 6:47 pm IST
பகிர்:

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பவா செல்லத்துரை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சீசன்களை போல் அல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள், இரண்டு நாமினேஷன்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டைக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

முதல் வார முடிவில் மக்கள் குறைவாக வாக்களித்த அனன்யா வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பெரிதாக எந்த விளையாட்டிலும் பங்கேற்காமல் பவா செல்லத்துரை மிக சோர்வாக காணப்பட்டார். முதல் வார இறுதியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்வில் பிக் பாஸ் வீட்டைவிட்டு யார் வெளியேறுவார் என்று கேட்டபோது, பெரும்பாலானோர் பவா செல்லத்துரையின் பெயரை கூறியது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இரண்டாவது வாரம் வீட்டில் சோம்பேறியாக இருப்பவரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்த வார கேப்டன் விக்ரமிடம் பிக் பாஸ் கூறினார். உடனடியாக பவா செல்லத்துரையை விக்ரம் அனுப்பினார்.

இந்த நிலையில், மனநிலையும் உடல்நிலையும் சரியில்லாததால் உடனடியாக என்னை வீட்டைவிட்டு வெளியேற்றுங்கள் என்று பிக் பாஸிடம் பவா செல்லத்துரை முறையிட்டார்.

அவரிடம் பிக் பாஸ் பேசிய நிலையில், பவா செல்லத்துரை தனது முடிவை மாற்றிக் கொள்ளாததால் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments