ஹாய் படத்திற்காக துருவ் பாடிய குடிகார நெஞ்சு!
நடிகர் துருவ் புதிய பாடலைப் பாடியுள்ளார்...
நடிகர் துருவ் ஹாய் திரைப்படத்திற்காக பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ஹாய். இதனை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் சில பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் துருவ் குடிகார நெஞ்சு என்கிற பாடலைப் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது காதல் தோல்வி குறித்தான பாடலாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.
Actor Dhruv has sung a song for the movie Hi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.