முகப்பு
செய்திகள்

மம்மூட்டி, ஜீவா நடிக்கும் ‘யாத்ரா 2’ போஸ்டர் வெளியானது!

நடிகர் மம்மூட்டி, ஜீவா இணைந்து நடிக்கும் ‘யாத்ரா 2’ படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 9 அக்டோபர் 2023, 1:04 pm IST
பகிர்:


நடிகர் மம்மூட்டி, ஜீவா இணைந்து நடிக்கும் ‘யாத்ரா 2’ படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.

தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்க உள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று காலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், யாத்ரா 2 படமானது அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.