FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பழங்குடியின குழந்தைகள் பலி: ம.பி. அரசைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!

மத்தியப் பிரதேசத்தில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குழந்தைகள் பலியானது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

17 செப்டம்பர் 2026, 5:10 pm IST
ராகுல் காந்தி
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குழந்தைகள் பலியானது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் நகரில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குழந்தைகள் சமீபத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தனர்.

கடந்த 4 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதுமாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பலியானோரில் பெரும்பாலானோர்  பைகா பழங்குடியினக் குழந்தைகள். மேலும், சில கோண்ட் பழங்குடியினக் குழந்தைகளும் இதில் பலியாகினர்.

இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகள் குறிப்பிடப்பட்டாலும், அங்கு மருத்துவம் மற்றும் சுகாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதுதொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில், மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் நகரில் பழங்குடியினக் குழந்தைகள் 30 -க்கும் மேற்பட்டோர் நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி பலியாகியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் அரசின் அலட்சியம் எந்த அளவிற்கு இருந்தது என்றால், அப்பாவிக் குழந்தைகளின் உயிர்கள் தொடர்ந்து பறிபோனபோதும் அதுதொடர்பான நடவடிக்கைகள் மந்தமாகவே எடுக்கப்பட்டன. அரசும் நடவடிக்கை எடுக்காமல் உறங்கிக் கொண்டிருந்தது.

ம.பி. முதல்வர் அவர்களே, விளக்கேற்றி பண்டிகைகளைக் கொண்டாடி முடித்த பின் உங்களுக்கு நேரம் கிடைத்தால் மாநிலத்தின் கள யதார்த்தத்தைப் பாருங்கள்.

நோய் கட்டுப்படுத்துதல், ஊட்டச்சத்து, சுத்தமான நீர் போன்றவற்றின் பற்றாக்குறை மற்றும் சீர்குலைந்து வரும் சுகாதார அமைப்பால் சின்னஞ்சிறு குழந்தைகளின் உயிர்கள் பறிபோகின்றன.

கலப்படம் கொண்ட மருந்துகளும், விஷம் கலந்த கள்ளச்சாராயமும் பல நூறு கணக்கான குடும்பங்களை அழித்து வருகின்றன.

நான் இந்தூர் சென்றேன். மேலும், மத்தியப் பிரதேசம் முழுவதுமுள்ள மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ந்து கருத்துக்களைக் கேட்டு வருகிறேன். இங்கு வெளிச்சத்திற்கு வரும் கொடூர சம்பவங்கள் ம.பி.யின் கல்வி அமைப்பு நாட்டிலேயே மிகவும் சீரழிந்த ஒன்றாக இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

மாணவர்கள், குழந்தைகள், ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் என அனைவரும் இங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். யாரும் மகிழ்ச்சியாக இல்லை.

இன்று இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த, திறமையற்ற அரசாக மத்தியப் பிரதேச அரசு இருக்கின்றது. அதுவே உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Rahul Gandhi has posted about the deaths of more than 30 tribal children in Madhya Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments