வெளியானது இறைவன் படத்தின் டிரைலர்!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன.
இதையும் படிக்க | நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகரை இயக்கும் சேரன்!
Advertisement
Advertisement
மேலும், இப்படம் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 வருமா? முட்டுக்கட்டையாக 2 நடிகர்கள்!
ஆனால், இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால் செப்.28 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.