விரைவில் டாக்ஸிக் படப்பிடிப்பு!
நடிகர் யஷ் நடிக்கவுள்ள டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்கிறார். டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
நடிகர் யஷ்ஷும் இணை தயாரிப்பாளராக களமிறங்குகிறார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் துவங்க உள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இயக்குநர் கீது கோகன்தாஸ் லையர்ஸ் டைஸ், மூத்தோன் படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது, தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் டின்னு என்கிற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.