செய்திகள்

‘அருண் விஜய் 36’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

DIN

நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரது 36 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார்.

அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை அளித்தது. பின்னர் தடம், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படமும் சிறப்பான வரவேற்பினை பெற்றது.

பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே நடித்துள்ள பார்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது 36வது படம் அறிவிப்பினை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாளை இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபி பாலசந்திரன் இந்தப் படத்தினை தயாரிக்கிறார். மற்ற விவரங்கள் நாளை (ஏப்.4) தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் கபடி வீரா் பலி: இருவா் காயம்

கனமழை எச்சரிக்கை: சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம்

அந்தோணியாா் திருத்தலம் 75-ஆவது ஆண்டு விழா

கோவை வழியாக இயக்கப்படும் கேரள சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு எஸ்பி சான்றிதழ்

SCROLL FOR NEXT