‘விக்ரம் 62’ படத் தலைப்பு டீசர்!
நடிகர் விக்ரம் 62 படத்தின் தலைப்பு டீசர் வெளியாகியுள்ளது.
தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர் விகரமுக்கு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் நல்ல திருப்பு முனையை அளித்தது. அதன் வெற்றிக்குப் பிறகு தற்போது, பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
விக்ரம் 62 படத்தினை சித்தா பட இயக்குநர் எஸ்யூ அருண்குமார் இயக்கி வருகிறார். அதன் அறிவிப்பு டீசர் முன்னமே வெளியாகி கவனம் பெற்றது.
இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் நடிகர் விக்ரம் பிறந்தநாளில் இதன் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வீர தீர சூரன் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் டீசர் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.