நடிகர் விக்ரம் இல்லையென்றால்... மாளவிகா மோகனன் பகிர்ந்த அனுபவம்!
நடிகை மாளவிகா மோகனன் நடிகர் விக்ரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகா அறிமுகமானார்.
தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
அடிக்கடி எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மாளவிகா மோகனன் பதிலளிப்பார்.
இந்த நிலையில், ரசிகர் ஒருவர் நடிகர் விக்ரமை முதன் முதலாக சந்தித்தது மற்றும் அவருடன் தங்கலான் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து கேள்வியெழுப்பினார்.
அதற்கு மாளவிகா, “நடிகர் விக்ரமை முதலில் சந்தித்தபோது நெருக்கமாக இருந்தேன். ஹாஹஹா.. தங்கலான் படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளில் அவருடன் நடித்தபோது நான் செய்த முட்டாள்தனங்களால் சங்கடமாக உணர்ந்தேன். அதுதான், என் முதல் சண்டை படம். ஆனால், அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் இல்லாத இந்தப் பயணத்தை கற்பனைகூட செய்ய முடியவில்லை. என்னவொரு மனிதர். எப்போதும் அவர் மீது அன்பும், மரியாதையும் மட்டுமே இருக்கும்” எனப் பதிலளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.